தேனியில் பிஎஸ்என்எல் பொது நிறுவனம் சார்பில் 25 ஆண்டு வெள்ளிவிழா முன்னிட்டு தொலைத் தொடர்பு துறை சாதனைகளை விளக்கி பேரணி நடைபெற்றது
தேனியில் பிஎஸ்என்எல் சார்பில் பிஎஸ்என்எல் ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதியன்று வெள்ளி விழா கொண்டாட உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. ஓய்வு பெற்ற அலுவலர்கள் பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள், எப் டி டி ஹெச் பார்ட்னர் ,சேல்ஸ் பார்ட்னர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டு சால்வை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது
.தொடர்ந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து கொட்டக்குடி ஆற்றுப் பாலம் வரை பழைய பேருந்து நிலையம் வழியாக சிறப்பு பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் மற்றும் சலுகைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு தேனி கோட்டா பொறியாளர் திருமதி சபியா தலைமை தாங்கினார். துணை கோட்ட பொறியாளர் ராமர், அழகுராஜா முன்னிலை வகித்தனர். இளநிலை தொலைதொடர்பு அதிகாரி கணேசன் , அலுவலர்கள் முனியாண்டி, கார்த்திகேயன் ,முருக பிரபு, சுசிலா பெரியநாயகி ,சத்தியபாமா ,ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் பணியாளர்கள் ,ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், எப் டி டி ஹெச் பார்ட்னர் ,சேல்ஸ் பார்ட்னர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்



