Type Here to Get Search Results !

தேனி மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் 8 - 9 - 2025

 தேனி மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் 8 - 9 - 2025 


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்மேலும் இந்த வேலையினை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றும் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt  

சாலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt  

தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கும்21 மாணவ மாணவிகள் போடி மெட்டு சாலை வழியாக மூணாறுக்கு சென்றுள்ளனர்.மேலும் சுற்றுலா முடிந்த பின்பு மூணாறில் இருந்து திரும்பியபோது போடி மெட்டு மூணாவது வளைவு பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணி அளவில் வாகனம் பிரேக் பிடிக்காமல் இருந்ததால் வாகன கட்டுப்பாடு இழந்து அந்தப் பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு காயம் ஏற்றப்பட்டது.


கோவிலுக்கு செல்வதனால் இன்று விடுமுறை ஓபிஎஸ்


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்கள் ஓ பன்னீர் செல்வத்தை பல்வேறு கேள்விகள் கேட்டனர் அந்த கேள்வியின் போது கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் கிளம்பி உள்ளேன் என்றும் செங்கோட்டையன் டெல்லிக்கு செல்வத்தை பற்றி தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும்,கோவிலுக்கு செல்வதினால் இன்று விடுமுறை என்றும் ஓபிஎஸ் சிரித்தவாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

சமையல் கூட்டத்தை இடிக்க கோரி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்


அரசுப் பள்ளியில் சமையல் கூடத்தை இடிக்க கோரி மாணவர்கள் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி புதூர் கிராமம் இந்த கிராமப் பகுதியில் அமைந்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வந்த நிலையில் இந்தப் பள்ளியில் உள்ள சமையல் கூடமானது ஆபத்தாகவும், இடியும் நிலையில் உள்ளதாகவும்,இந்த சமையல் கூடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றும் ,இந்த பள்ளியில் உள்ள மேல்நிலைத் தொட்டியினை சரி செய்ய வேண்டும் என்று கூறிய பள்ளியின் முன்பு மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store