பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கவுன்சிலர் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி நகர் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா மனு அளித்தார். இந்த மனுவில் தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது என்றும்,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தற்பொழுது தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ,மதுரை சாலை ஆகிய பகுதிகளில் இரு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது என்றும் ,
இதனால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பாதை இல்லாமல் சாலைகளில் நடந்து செல்கின்றனர் என்றும் ,பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் ,
இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கம்பம் - பெரியகுளம் -மதுரை சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தார்



