தேனி மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 35க்கும் மேற்பட்டவர்கள் கைது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த கோரி பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாகசிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ,மாவட்ட நிதிக்காப்பாளர் காமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று கூறி விளக்குவுரையாற்றினார்கள்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்ந்து தேனி -மதுரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் .பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்து தேனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் அடைத்து வைத்தனர் .இந்த மறியல் 10 பெண்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர்
மேலும் தற்பொழுது தீபாவளி திருநாள் வருவதினை தொடர்ந்து அரசு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது







