தேனியில் பாஜக சார்பில் தேவர் ஜெயந்தியினை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் முத்துராமலிங்க தேவரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் .இதேபோல் தேனி மாவட்டம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்வேறு சமுதாய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தன் ஆர்வலர்கள் சார்பில் அவருடைய திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்துக்கும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் தேனி மாவட்ட பாஜக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவேல் நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது .முன்னதாக பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டிகளுக்கு தேனி நகர் பாஜக சார்பாக சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜகவின் தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றிய வாழ்க்கை வரலாற்றினை கடைபிடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறினார்
மேலும் இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள், பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான பங்கேற்றனர்




