எங்கள் பாதையை மீட்டுக்கொடு!" - கடமலை மயிலை ஒன்றிய அலுவலகத்தில் மந்திசுனை மக்கள் திரண்டதால் பரபரப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட மூலக்கடை அருகே உள்ள மந்திச்சுனை மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் பொதுபாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் இதனால் புதிய கால்நடை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது மாதங்களாகியும் திறக்கப்படாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,மேலும் அதேப் பகுதியில் மந்திச்சுனை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நூலக கட்டிடம் கட்டுவதற்கான உத்தரவு வந்துள்ள நிலையில் தற்போது அந்தப் பகுதிக்கு செல்லும் பாதையை அதே பகுதியைச் சேர்ந்த சாமி கண்ணன் என்ற நபர் ஒருவர் குடிசை அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் அந்த பகுதி மக்கள் பொது பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதையை மீட்டு தரகோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒன்றிய கடமலை மயிலை ஊராட்சி அலுவலகம் முதல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்டோர் 50 பேர் மேலும் ஊர் பொதுமக்கள் இன்று கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுபாதையை மீட்டு தர கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக.இதனால் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கடமலைக்குண்டு காவல் துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்
பேட்டி:திருமுருகன்-மந்திசுனை

