தேனி: சாத்தாகோவில்பட்டியில் பாஜக தெருமுனைப் பிரச்சாரம் - மக்கள் மத்தியில் எழுச்சி!
பெரியகுளம் (தேனி மாவட்டம்):
தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், வடக்கு சாத்தாகோவில்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எழுச்சிமிக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமை மற்றும் முன்னிலை
பாஜக தேனி மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, நெசவாளர் பிரிவு மாவட்டச் செயலாளரும், சக்தி கேந்திர பொறுப்பாளருமான குமரேசன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சாதனைகள் விளக்கம்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் துணைத் தலைவர் மோகன் தாஸ் மாவட்டச் செயலாளர் உற்சாக தேவர் ஆகியோர் பங்கேற்றனர்.
"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம்" என்று விரிவாக எடுத்துரைத்தனர்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்:
நெசவாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் பெரியசாமி,வடக்கு ஒன்றியத் தலைவர்முருகன்பாண்டியன் ஒன்றியப் பொதுச்செயலாளர் சதிஷ் ஒன்றியத் துணைத் தலைவர்கள் சக்திவேல்,வெற்றிவேல் குமார்மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும், திரளான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

