எங்களுக்கு உரிய மரியாதை வேண்டும்" - தேனியில் பேட்டியளித்த நமது மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியின் அதிரடிப் பேச்சு.
தேனியில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்அரசியல் அதிகார உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாடை முன்னிட்டு தேனி நகர் முழுவதும் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த சந்திப்பில்
நமது மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும் கூட்டணிக்குதான் மாபெரும் வெற்றிக் கூட்டணியாக வருகின்ற தேர்தலில் அமையும் , எங்களுக்கு மரியாதை அளிக்கக்கூடிய கட்சியுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக எங்களுடைய கட்சியின் மரியாதைக்கு உரிய சீட்டுகள் வழங்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். த.வெ.க விஜய் வந்து "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்கிறார். அதை வரவேற்கிறோம். எங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய பிரதான கொள்கைகளாக நாங்கள் வைத்திருக்கின்ற தூய நீர், தூய காற்று, தூய மண் வளம், விவசாயிகளுக்கான விலை நிர்ணயம் போன்ற கொள்கைகளை வைத்திருக்கும் நிலையில் அந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் எல்லா கட்சியிலும் கூட்டணி கூறித்து பேசி வரும் நிலையில் எங்களின் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் வேண்டும்.எல்லா கட்சியுமே எங்களுக்கு நண்பர்கள் தான்.
அனைத்து கட்சியுமே நண்பர்கள் தான். "நமது மக்கள் முன்னேற்றக் கழகம்" வரணும்னு சொல்லி அனைத்து கட்சியுமே விரும்பும் நிலையில் எங்களுடைய உயரத்துக்கு தகுந்த மாதிரி நாங்க சீட்டுகளை கேட்கிறோம். நிச்சயமாக எங்களுடைய தகுதியின் அடிப்படையில் சீட்டுகள் வழங்குவார்கள் என்று நம்புறோம். தற்பொழுது வந்த பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் பற்றாக்குறை பட்ஜெட்டாக போடக்கூடாது. வருவாய் பட்ஜெட்டாக இருக்க வேண்டும். மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் நம்முடைய தேசத்திற்கு வருவாயை கூட்டக்கூடிய பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. ஏற்றுமதிக்கான திட்டங்களை வகுக்கணும். கல்வியிலே ஏற்றுமதி கல்வியை கொண்டு வரணும். விவசாய கல்வியை ஊக்குவிக்கணும். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் விவசாயமும், வியாபாரமும் சேர்ந்ததுதான் இந்தியா. இதற்கான பட்ஜெட்டாக அமைய வேண்டும் கலைஞர் மகளிர் திட்டம் என்பது தேர்தல் காலம் என்பதால், வரவேற்கக் கூடியதுதான்.
நிச்சயமாக கம்பம் தொகுதியில் போட்டியிடுவேன். தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதியுமே வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்தான். 234 தொகுதிகளிலும் அதிகமான வாக்கு வங்கிகளை வைத்திருக்கிறோம். இந்த மூன்று மாதத்தில் ஏழு மாநாடுகளை நடத்திய ஒரே கட்சி "நமது மக்கள் முன்னேற்றக் கழகம்" தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலே எங்களது பெரும்பான்மையை நிரூபிப்போம்.
பிரதான கட்சிகள் இன்னும் குழு போடவில்லை. அவர்கள் குழு போட்டவுடன், நமது மக்கள் முன்னேற்றக் கழகமும் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும். நமது மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரைதேர்தலை சந்திக்க வில்லை.
ஆனால் குறைந்தபட்சம் தொகுதிக்கு 10,000 ஓட்டுகள் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வாக்குகள் வரை எங்களுக்கு ஒரு சில தொகுதிகளில் உள்ளது.பாண்டிச்சேரியிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம. திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்பதை செய்தியாளர் கேட்டபோதுஎந்த ஒரு அரசியல் கட்சியையும் குறை சொல்வது எங்கள் கொள்கை அல்ல. நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்வதுதான் எங்கள் கொள்கை. கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வரை சந்தித்தோம். கண்ணகி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கம்பத்தில் 25 ஆண்டுகளாக வைக்கப்படாமல் உள்ள வ.உ.சி சிலையை வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். முதலமைச்சர் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார் என்று கூறினார்






