தேனி பாஜக அலுவலகத்தில் அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!
தேனி:
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (BJP) அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார்.
குக்கர் சின்னத்திற்கு வாக்குச் சேகரிப்பு
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், கூட்டணி வேட்பாளரான டாக்டர் கதிர்காமுவை பாஜக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து தீவிரத் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், 'குக்கர்' சின்னத்தில் வாக்களித்து வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்.


