Type Here to Get Search Results !

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்கள்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு மேற்கொண்டார்கள்.



தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, புதூர், கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளிலும்,  தேவாரம் மற்றும் உத்தமபாளையம் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்             ஆர்.வி.ஷஜீவனா,இன்று (22.02.2024)  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 



இன்று காலை 05.30 மணி அளவில் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகைப்பதிவேடு மற்றும் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

புலிகுத்தி மற்றும் தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவருந்தி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். 


நடப்போம் நலம்பெறுபோம் திட்டத்தின் கீழ்  உத்தமபாளைம் அரசு மருத்துவமனை முன்பு தொடங்கி,  வட்டாட்சியர் அலுவலகம், அம்பாசமுத்திரம் வழியாக, அம்மாபட்டி வரை சென்று மீண்டும் அதே வழியில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வரை அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் நடைபயிற்சியினை மேற்கொண்டனர்.



தேவாரம் மற்றும் உத்தமபாளையம் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது  குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். பண்ணைப்புரம், கோம்பை, புதூர் பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும்,  உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தூய்மை பணிகள்  மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பண்ணைப்புரம் தியாகராஜா திரையரங்கில்  ஆய்வு மேற்கொண்டார். 

 


 இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணி, திட்ட அலுவலர்  (மகளிர் திட்டம்) ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store