Type Here to Get Search Results !

Dis

ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி.

ஆண்டிபட்டி அருகே  கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  முன்னாள் மாணவ மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி. 


கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள்  சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நான்கு மாதங்களுக்கு முன்பு வாட்சப் குழுக்கள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுத்திருப்பதாக தெரிவித்த பழைய முன்னாள் மாணவ  மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள்  நேற்று மீண்டும் தங்களது பள்ளியில் சந்தித்தனர், இந்நிலையில் பழைய மாணவ மாணவிகள்  தங்களது மனைவி குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கூட்டமாக கலந்து கொண்டனர்,



இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நினைத்து பெருமிதம் தெரிவித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் நினைவு பரிசுகளையும் வழங்கி மறக்காமல் இருக்க பதிவுகளை செய்து கொண்டதோடு 


சினிமா பாடல்கள் பாடியும், கவிதைகள் சொல்லியும், கூடி நின்று பழைய பண்புகளையும் பரிமாறி  குடும்பத்தோடும் பேசி மகிழ்ந்தும் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு இன்னும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகவும் அனைத்து முன்னாள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.