ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு
தேனி மாவட்டம் சின்னமனூரில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் மற்றும் தாகம் தீர்த்த தந்தை கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.இதில் ஆசான் ஈஸ்வரன் தேனி மாவட்ட செயலாளர் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் தேசிய நடுவர் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து 18 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏராளமான மாணாக்கர்கள்,பயிற்சியாளர்கள், ஆசான்கள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் தகுதி தரத்தில் வெற்றி பெற்ற நினைவு பரிசும் கேடயமும்,சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கே.கே. பட்டி ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மாணகர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிலம்ப பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது மேலும் இந்த போட்டிக்கான ஏற்பாட்டினை செய்த சிலம்பம் பயிற்சி ஈஸ்வரன் அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் முதல் இரண்டாம் மற்றும் 16 பரிசுகளை பெற்று வெற்றி வாகை சூடினர் இதனை கருத்தில் கொண்டு கடமலைக்குண்டு மேலப்பட்டி கிராம பொதுமக்கள் முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை உடன் கிராம தெருகளில் மாலை அணிவித்து மரியாதை செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது மேலப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் நாகராணி ராஜாராம், சமூக ஆர்வலர் காளீஸ்வரன், சிலம்பம் மாஸ்டர் ராஜசேகரன், மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர், இந்நிலையில் வெற்றிவாகை சூடுவதற்கு சிலம்பப் போட்டியில் உறுதுணையாக இருந்த சிலம்பம் மாஸ்டர் ராஜசேகரன் அவர்களுக்கு கிராமம் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
.


