தேனி அருகே வடபுதுப் பட்டியில் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேனி மாவட்டம்
பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி பேருந்து நிலையத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் இன்று (21.03.2024) நடைபெற்றது.
இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வடபுதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கோசங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியாவாறு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


