தேனி பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஓதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் (Randomization) தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் இன்று (21.03.2024) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 33-தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெறவுள்ளதையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணி நடைபெற்றுள்ளது.
அதனடிப்படையில், 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 316 வாக்குச்சாவடி மையங்களுக்கு 379 கட்டுப்பாட்டு கருவியும், 379 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் 410 (VVPAT) இயந்திரங்களும்,
199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களுக்கு 356 கட்டுப்பாட்டு கருவியும், 356 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் 386 (VVPAT) இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 200.போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 378 கட்டுப்பாட்டு கருவியும், 378 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் 409 (VVPAT) இயந்திரங்களும்
201.கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களுக்கு 356 கட்டுப்பாட்டு கருவியும், 356 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் 386 (VVPAT) இயந்திரங்களும்
என மொத்தம் 1225 வாக்கச்சாவடி மையங்களுக்கு 1469 கட்டுப்பாட்டு கருவியும், 1469 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் 1591 (VVPAT) இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தேர்தல் இயந்திரங்கள் சேமிப்பு கிட்டங்கி திறக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்தெடுப்பதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதவன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய





