தேனி பாராளுமன்ற தேர்தல் இறுதி பட்டியல் வெளியீடு 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக அதிமுக , அமமுக , நாம் தமிழர் கட்சி, அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி, அமைதிக்கான மனிதநேய கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 43 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .
தள்ளுபடி உட்பட4 நபர்கள் வாபஸ் பெற்ற நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தற்பொழுது தேனி மாவட்ட ஆட்சி தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திலிருந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இறுதியாக திமுக அதிமுக , அமமுக , நாம் தமிழர் கட்சி, அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி, அமைதிக்கான மனிதநேய கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி சுயேச்சை வேட்பாளர்கள்
25 நபர்கள் களத்தில் உள்ளனர்
திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்திலும் அதிமுக சார்பில் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானை சின்னத்தில் ஜீவா என்பவரும்
அமைதிக்கான மனிதநேய கட்சி சார்பில் சர்ச்சில் துரை என்பவர் தர்ப்பூசணி சின்னத்திலும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திலும்,நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவர் மைக் சின்னத்திலும் ,அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி சார்பில்அறிவுடன் முடியரசு என்பவர் பட்டாணி சின்னத்திலும் ,மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கும் பல்வேறு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது



