தேனி மாவட்டத்தின் இன்றைய செய்திகள் 30-3 - 2024
தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ் செல்வன் பூதிப்புரம் பகுதியில் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ ஊற்றி பொது மக்களுக்கு கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்
திமுக சார்பில் ஆண்டிபட்டியில் பாராளுமன்ற தேர்தலுக்கான அலுவலகம் திறக்கப்பட்டது
கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
திமுக பிரமுகர் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த பன்னை தங்கராஜ் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருக் கோடை ராமர் முன்னிலையில்இணைந்தார்
பெரியகுளம் பகுதியில் தென்கரையில் உள்ள நூலகத்தில் வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றனர்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தம்பி நாயக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி தினகரனும் தேனி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளருமாகிய டி டி வி தினகரன் மனைவி அனுராதா தினகரன் குக்கர் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்
தேனி பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியலில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


