தேனியில் உள்ள விடுதிகளில் தீடிர் சோதனை ரூ.4,49,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது
மக்களவை பொதுத்தேர்தல் 33.தேனி நாடாளுமன்றத் தொகுதி
தேனி மாவட்டம், தேனி நகரில் வெளியூரினை நேர்ந்த நபர்கள் அனுமதியின்றி அதிக அளவில் விடுதிகளில் தங்கியிருப்பதாக வரப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி நேற்று (26.03.2024) இரவு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில், தேனி காவல் துணைக்கண்காணிப்பாளர், தேனி காவல் ஆய்வாளர், அல்லிநகரம் காவல் ஆய்வாளர், பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட 9 குழுக்கள் தேனி நகரில் உள்ள 29 தங்கும் விடுதிகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டதில் தெய்வா தங்கும் விடுதியில் உரிய அனுமதி இன்றி பணம் வைத்திருந்த நபரிடம் ரூ.4,49,500/- (ரூபாய் நான்கு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து ஐநாறு (மட்டும்) கைப்பற்றுதல் செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டதில் தகுந்த ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாதமையால் பணம் கைப்பற்றுதல் செய்யப்பட்டு பெரியகுளம் சார்நிலைக்கருவூல அலுவலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

