Type Here to Get Search Results !

வருசநாடு பகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாக்கு சேகரிப்பு.

 வருசநாடு பகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாக்கு சேகரிப்பு.




தேனி நாடாளுமன்ற  அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை - மயிலை  ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி முக்கிய  நிர்வாகிகளை  நேரில் சந்தித்து  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



இந்நிலையில்

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி அவர்கள்  நேற்று ஆண்டிபட்டி ஒன்றிய கழகச் செயலாளர்கள் லோகிராஜன் , வரதராஜன் தலைமையில் உள்ள ஒன்றிய கழக நிர்வாகிகளையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டிக்காளை  தலைமையில் ஒன்றிய கழக நிர்வாகிகளையும்,  கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வருசை ராமர் தலைமையில் ஒன்றிய கழக நிர்வாகிகளையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.


பின்னர் தேமுதிக கூட்டணி  கட்சி முக்கிய நிர்வாகிகள் பரமராஜ், ஒன்றிய செயலாளர் நாகர், ராமர் அனைவரையும்  கடினமாக உழைத்து  இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் பேசினார் . இதில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் , மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜக்கையன்,  மாநில ஜெ, பேரவை செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சோலைராஜ், மாவட்ட  தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம்ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் சுப்புராஜ்,  ஒன்றிய கழக அவைத் தலைவர் ராமர், ஒன்றிய  ஜெ,பேரவை செயலாளர் பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் சுமதி, சாந்தி, கிளைக் கழக நிர்வாகிகள்  முருகவேல் தென்னரசன், சோதிபாசு, பந்தல்ராஜா, மாஸ்டர்செல்வா, பழனிச்சாமி, சேகர் மலைச்சாமி கண்ணன் வீரமணி  உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.
 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍



தேனி மாவட்ட தகவல் பார்த்திட




.

வாட்சாப் குழுவில் இணைய




👍👍👍👍 👍👍👍👍👍👍



வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store