ஆவணமின்றி ரூ 50000 க்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிப்பு
தேனி பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் தர்ம்வீர் தண்டி, IRAS, மற்றும் விஜீந்திர குமார் மீனா, IRS (C&CE) ஆகியோர் தலைமையில் இன்று ( 21.03.2024) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 4 சட்டமன்ற தொகுதிகளான 198. ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி, 199.பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, 200.போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி,, 201. கம்பம் சட்டமன்ற தொகுதிகளில் நிலை கண்காணிப்பு மற்றும் பறக்கும்படைகளில் ஈடுபடும் அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்ட வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்திடவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காகவும், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பணியினை ஜனநாயக முறையில் செயல்படுத்த வேண்டும்
பறக்கும் படை குழுவினர்கள் தங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக சென்று சோதனை மேற்கொள்ளவும், ஏதேனும் பணமோ, பொருளோ பறிமுதல் செய்யும் பட்சத்தில் உடனடியாக புகார்களை பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருள் அல்லது பணத்தினை கருவூலத்தில் ஒப்படைத்து அதற்கான இரசீதினை பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பொருள் அல்லது பணத்தின் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு அலுவலர்களால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
சோதனையின் போது வாகனங்களில் ஆவணமின்றி தனிநபர் ஒருவர் ரூ.50,000/-வரை எந்தவித ஆவணங்களின்றி எடுத்துச் செல்லலாம். ரூ.50,000/- மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், உரிய ஆவணங்களின்றி ரூ.10,000/-க்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
மேலும், பறிமுதல் செய்த பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும்.
கண்காணிப்புக் குழுவினர் அனுமதி பெற்று அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் நடத்தும் பிரச்சாரம், பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை முறையாக, எதனையும் விட்டு விடாமல் ஒளிப்பதிவு செய்திட வேண்டும். இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்றும், தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் செலவினங்களை கணக்கிட ஏதுவாக இருக்கும்.
ஆகையால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்கள் தங்களது பணியினை கவனமுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி பணி மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், 6 சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


