கடமலைக்குண்டு அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா மற்றும் புதுப்பிக்கப்பட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன் தலைமை தாங்கினார்முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாதன் வரவேற்புரை ஆற்றினார்
இதில் கடமலை மயிலை வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி மற்றும் அருண்குமார் , மயிலாடும்பாறை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக
கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவர் சித்ராசுரேஷ் துணை சேர்மன் சேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்எஸ் மாடசாமி ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்கள், இந்நிலையில் தேனி கூடுதல் திட்ட அலுவலர் மோகன் , முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்புராஜ் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டேவிட்ராஜா , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
விழாவின் முக்கிய அம்சமாக புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் வண்ணப் புத்தாடை அணிந்து புதிதாக சேர்ந்த மழலை மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் ஒருசேர வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது
இதையடுத்து புதிய மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி புதிய சேர்க்கை சான்றிதழையும் ஆசிரியர்கள் வழங்கினார்கள் .விழாவின் முக்கிய அம்சமான தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை பள்ளி மாணவி பாடலுக்கு தாளம் தப்பாமல் ஆடி காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது
மேலும் கரகம் கும்மி உள்ளிட்ட கிராமிய பாடல்களுக்கும் மற்றும் திரைப்பட பாடல்களுக்கும் மாணவ மாணவிகள் வண்ண உடைகள் அணிந்து அலங்கார வேடமிட்டு தத்ரூபமாக ஆடிக்காட்டியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது
விழாவில் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தொடக்க கல்வி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் , வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் , கண்காணிப்பாளர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , தன்னார்வலர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் , ஊர் நாட்டாமை உள்ளிட்ட கிராம கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அரசு பள்ளி ஆண்டுவிழா வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது
விழா முடிவில் இடைநிலை ஆசிரியர் லட்சுமி நன்றி கூறினார்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




