பொது தேர்தலை முன்னிட்டு மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் , பிறக் கூட்டங்கள் நிறுத்தி வைப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷஜீவனா, தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், ஒவ்வொரு மாதமும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெறவும்



