சின்னமனூரில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமை வகித்தார்.சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி முன்னிலை வகித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் வெற்றி வாகை சூட்டுவது எப்படி என்றும் தேர்தல் குறித்து சிறப்பு ஆலோசனை நடைபெற்றது .
இந்த கூட்டத்துக்கு வருகை புரிந்த மாவட்டச் செயலாளர் ஜக்கையன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து சின்னமனூர் நகர அதிமுக சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிவக்குமார்,பாண்டியராஜ், முத்துரத்தினம்,கோம்பை கண்ணன்,ஜெயக்குமார்,பால மணிமார்பன்,சீதாலட்சுமி, காசிமாயன்,அன்பழகன்,கண்ணன் எம்.ஆர்.ஈஸ்வரன்,சந்தான முத்தையா,ராமர் மற்றும் மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


