இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் - டிடிவி செய்தியாளர் சந்திப்பு
பொது சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றால் நாட்டில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள், அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் மற்றும் முன்னாள் பிரதமராக இருந்த நேரு காலத்திலேயே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது - டிடிவி தினகரன்.
தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்..,
நான் உங்களில் ஒருவன்… உங்களுக்கானவன்… காவிரிக் கரையில் பிறந்த என்னை, இந்த வைகை மண்ணைச் சேர்ந்த மக்கள் வாரியெடுத்து மகிழ்வதும், கொண்டாடுவதும் நான் செய்த புண்ணியமாகவே கருதுகிறேன். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உங்கள் வீட்டுப் பிள்ளையாக, சகோதரனாக, நண்பனாகக் கருதி, அருவியைப் போல என் மீது அன்பை அள்ளி கொட்டும் எனது அருமை தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவன் ஆவேன்
வானத்தை நோக்கி எறியும் எந்த ஒரு பொருளும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியை நோக்கி திரும்பி வருவது போல உங்களின் மீது நான் கொண்டிருக்கும் அன்பு கலந்த ஈர்ப்பால் மீண்டும் என் சொந்தங்களைத் தேடி வந்திருக்கிறேன். தேனி மண்ணில் விளையும் செங்கரும்பு திகட்டாத தித்திப்பை தரக்கூடியது. அதுபோலவே இங்கு வாழும் மக்களும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் அன்பை என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.
தேனியையும் வைகையையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது என சொல்லும் அளவிற்கு யாருக்கும் வாய்க்காத பந்தம் எனக்கு கிடைத்திருக்கிறது. என் மீது நீங்கள் காட்டும் அன்பைக் கண்டு எதிரிகளும் துரோகிகளும் அதிசயித்து கிடக்கிறார்கள். அன்பு, அறிவு, துணிவு, ஆளுமை என்பதற்கு ஒற்றை இலக்கணமாக திகழ்ந்தவர் இதயதெய்வம் அம்மா அவர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த இதய தெய்வம் அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று துரோகிகளின் கையில் சிக்கிக் கிடக்கிறது.
எந்த லட்சியத்தை முன்னிறுத்தி நம் இயக்கம் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை எட்டும் வரையில் ஓயமாட்டோம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நேர்மையான பாதையில் துடிப்பான தொண்டர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான எண்ணற்ற கொள்கைகளை கொண்டிருக்கும் நமது இயக்கம் எட்டியிருக்கிறது. அதற்கான முதல் நாடாளுமன்றத் தேர்தலை வலுவான சந்திக்கின்றோம். வெற்றிக்கான பாதையை படியாக அமைந்திருக்கும். கூட்டணி அமைத்து பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமரவைப்பதன் மூலம் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை மக்கள் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியை தமிழகத்தின் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றும் முனைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
ெதாடந்து
தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார், குறிப்பாக தேனி மாவட்டம் வேளாண்மை தொழில் நிறைந்த மாவட்டம் என்பதால் விளை நிலங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வரும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் உறுதியாக ஆட்சி அமைக்கும் என்றும்.,
காமராஜர், அண்ணா,எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் மக்களுக்கான ஆட்சியாக அது அமையும் என்று குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் கடந்த சில நாட்களாக உள்ள போதை மற்றும் கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்க கூடாது என்பதற்காக அதிமுகாவில் பழனிச்சாமி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர்.,
அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் இருந்தபோதே பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதிப்பு என்பது இங்கு உள்ள சிலர் திராவிட அரசியல் என்ற போர்வையில் செய்யும் தவறான பொய் பிரச்சாரங்களே தவிர., உண்மையாகவே மதத்தின் பெயரால் பாதிக்கப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாக தான் அந்த சட்டம் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்.,
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் செலவுகளை குறைப்பதற்காக கொண்டுவரப்படும் திட்டம் தானே தவிர அதனை வைத்து பாரதிய ஜனதா கட்சி Article 356 ஐ தவறாக பயன்படுத்தும் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்றும் தெரிவித்தார்.
சுயநலத்திற்காக இரட்டை இலை சின்னத்தை பழனிச்சாமி பலவீன படுத்திக் கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வகுத்த சட்ட திட்டங்களுக்கு எதிராக அவர் செயல்படுவதால் உண்மையான அதிமுக தொண்டர்கள் தேர்தல் முடிவிற்கு பின்னர் அவருக்கு எதிராக ஒன்று சேருவார்கள் என்றும் அவர். அப்போது தெரிவித்தார்.



