ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் திருவிழா திருமஞ்சனகுடம் அழைப்புடன் தொடங்கியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் 61வது பொங்கல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழா இன்று காலை திருமஞ்சன குடம் அழைப்புடன் தொடங்கியது.
ஆண்டிபட்டி 13வது வார்டு மேற்கு ஓடை தெரு மதுரை தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா சித்திரை மாதம் அதி விமர்சையாக கொண்டாடப்படும். விழாவை முன்னிட்டு இன்று காலை வைகை சாலையில் இருந்து உற்சவமூர்த்திகள் முன் வர , மேளதாளம் முழங்க, திருமஞ்சனக்குடம் அழைத்துவரப்பட்டு, ஆண்டிபட்டியில் உள்ள காளியம்மன் கோவில், முனியாண்டி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை ஊர்வலமாக வலம் வந்து, ஆஞ்சநேயர் கோயிலை அடைந்தது .அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து 27ஆம் தேதி ராமர் லட்சுமணர், அனுமன் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம் வந்து, கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மதியம் அன்னதானம் வழங்கப்படும் என்றும், 29ஆம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட
Follow this link to join my WhatsApp group:


