தேனியில் ஜமாத் கமிட்டி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புது பள்ளிவாசலில் தேனி மாநகர் ஜமாத் கமிட்டி மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை கருத்தரித்தல் மையம் சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அல்லிநகரம் ஜாமத் தலைவர் அப்பாஸ் மந்திரி தலைமையிலும் தேனி புது - பள்ளிவாசல் துணை செயலாளர் சேட், அமீன் இமாம் ஆகியோர் முன்னிலையிலும்
நடை பெற்ற இந்த முகாமினை தேனி டிஎஸ்பி பார்த்திபன் பங்கேற்று தொடங்கி வைத்தார். புது பள்ளிவாசல் அசன் , சச்சா , அகிம் , மற்றும் நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில்
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் மக்கள் தொடர்பாளர் சலீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டனார் .நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
சிறுநீரகம் சம்பந்தமான சிகிச்சை , சர்க்கரை நோய் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சம்பந்தமான பரிசோதனை , காது மூக்கு தொண்டை பரிசோதனை , சர்க்கரை இரத்த அழுத்தம் சம்பந்தமான பரிசோதனை , காய்ச்சல் , இருமல் சளி பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது .
மேலும் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தேனியில் உள்ள தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்திற்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது மேலும் இந்த முகாமில் தேனி , ஆண்டிபட்டி , பெரியகுளம் , மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்





