வருசநாடு அருகே சீலமுத்தையா திருக்கோவிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது சீல முத்தையாபுரம் இங்கு சீல முத்தையாசுவாமி திருக்கோவில் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு திருவிழா அமோகமாக நடைபெறும்
இந்நிலையில் இன்று யாகபூஜை விநாயகர் ஹோமம் அன்னதானம் ,சர்க்கரைப் பொங்கல் வைத்தல், பிடிகாசு கொடுத்தல், சுவாமிக்கு தீப ஆராதனை, போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதற்கான முழு ஏற்பாடுகளை கோவில்பூசாரி தாமோதரன், தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கிராம முக்கியஸ்தர்கள் அணைவரும் கலந்து கொண்டனர்,
இக்கோவிலுக்கு கடமலை மயிலை ஒன்றியத்தை சேர்ந்த வருசநாடு,மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கம்பம், ஓடைப்பட்டி, கண்டமனூர், ஆண்டிபட்டி ,சின்னமனூர், போன்ற பகுதியில் இருந்து பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர்.





