கண்டமனூர் அருகே ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார்.
சினிமா செய்திகள்
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
கண்டமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கான ரேஷன் கடை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அரிசி, பாமாயில் சீனி, பருப்பு, உள்ளிட்ட வீட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வயதானவர்கள் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் ரேஷன் கடையில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தலைச் சுமையாக வீடுகளுக்கு தூக்கிவர வேண்டிய அவலம் காணப்பட்டது. இதுதொடர்பாக அந்த கிராம பொதுமக்கள் ஆண்டிபட்டி தி.மு.க எம்எல்ஏ மகாராஜனிடம் கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து துரிதமாக நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ புதூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூபாய் 12. லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வந்தது. ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் சரவணன் , கடமலைக்குண்டு கூட்டுறவு கிளை மேலாளர் கண்ணன், க.மயிலாடும்பாறை யூனியன் சேர்மன் சித்ராசுரேஷ், ஒன்றிய ஆணையாளர்கள் ஜெயபிரகாஷ், சிவகுமார், கடமலை மயிலை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் மலைச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.எஸ். மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்சகாளை, மாவட்ட வர்த்தக அணி குறிஞ்சி மாடசாமி, கிளைக்கழக நிர்வாகிகள் கருணாநிதி, ஈஸ்வரன்,
ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், ஊராட்சி கழக நிர்வாகிகள் பழனிச்சாமி, ஜெயச்சந்திரன், கிளை அவைத் தலைவர் பாண்டி, வடக்கு ஒன்றிய இளைஞரணி ஈஸ்வரன், பொருளாளர் முருகன், பிரதாப், ஜெயராஜ், நியாயவிலைக்கடை அலுவலர்கள் கணேசன், ராமமூர்த்தி, அமுதவல்லி, அரசு ஒப்பந்ததாரர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து புதூர் ராமச்சந்திராபுரம் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாமை வெற்றிச்செல்வன் சார்பிலும் தமிழக அரசுக்கும் ஆண்டிபட்டி எம்எல்ஏ விற்கும் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்தனர்.




