பெரியகுளம் அருகே திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலூகா கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ராம் நிவாஸ் ஏஜென்சி மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

