தேனி அருகே கோட்டூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கும் பாராட்டு
தமிழகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் பாலமேடு ,அவனியாபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான காளைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது .அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளையும் அடக்கும் விதமாக பல்வேறு வீரர்கள் பங்கேற்று சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டுகளை அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்
அந்த வகையில் தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த செவலகாளை என்ற காளை தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை குவித்துள்ளது இதனால் இந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை பாராட்டும் விதமாக ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். அதேபோல்கோட்டூர் கிராமத்தில் சேர்ந்த மௌலி என்பவர் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு காளைகளை அடக்கி பரிசுகளை வென்று உள்ளார் .இதனால் ஜல்லிக்கட்டு வீரரை பாராட்டும் விதமாக கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பிலும் தமிழர் வீர விளையாட்டு கழகம் சார்பிலும் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தியும் கௌரவம் செய்யப்பட்டது.இதேபோல் ஜல்லிக்கட்டு வீரர் ராஜா என்பவர் பல்வேறு ஜல்லிக்கட்டு காளை அடக்கியதற்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது




