2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அதிமுகவிற்கு வாழ்வு - ஓபிஎஸ்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பஞ்சமி நிலம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஓபிஎஸ்
தேனி அல்லிநகரத்தில் கடந்த ஜெயலட்சுமி என்பவரின் நிலம் 1970 ஆம் ஆண்டு ஜெயலட்சுமியின் வாரிசு இராஜகோபால் என்பவருக்குப் பின் 1984 ஆம் ஆண்டு நிலம் உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை (முத்துக்காளை - மூக்கன்) ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது
கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்புராஜ் அவர்களிடம் இருந்து நான் நிலத்தை வாங்கினேன் பின்னர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்தேன் விட்டேன் என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் அதிமுக இயக்கத்தை உருவாக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர் என்றும் ஜெயலலிதா அவர்களை நிரந்தரம் பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்யப்பட்டது .
கட்சியின் விதிமுறைகள் படி தேர்தல் மூலமாக தான் பொதுசெயலாளர் தேர்வு செய்ய முடியும் இந்த விதி யாராலும் திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியை திருத்தம் செய்தார் அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம்
நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம் தான் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது
மேலும் பேசிய அவர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்
நானும் செங்கோட்டையனும் இணைந்து கோவை முதல் மதுரை வரை பல மாநாடுகளை நடத்துவதற்காக நேரில் சென்று ஏற்பாடுகள் செய்து உள்ளோம் என்றும் தற்பொழுது நண்பர் செங்கோட்டையனை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான் என தெரிவித்தார்
நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதால் தான் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு என்றும்
தந்தை பெரியார் சமுத்துவத்திற்கு முன்னோடி என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால் தான் அனைவருக்கும் நல்லது என்றும் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன என்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தாங்கள்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர் என்றும் த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்







