தேனியில் த வெ க சார்பில் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை
தேனியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் S.பிரகாஷ் அவர்களின் தலைமையிலும், தேனி நகர பொறுப்பாளர் J. ஸ்ரீஜெயந்த் முன்னிலையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
.அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவருடைய திரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,நகர நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர்,கிளை வார்டு, மகளிர் அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .
தொடர்ந்து அஞ்சலை அம்மையாரின் வாழ்க்கை குறித்தும் அவருடைய கொள்கைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்




