தேனியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏ.எச் எம் டிரஸ்ட் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது .மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி பங்கேற்று விழிப்புணர்வு நாடகத்தை தொடங்கி வைத்தார்.
ஏ.எச்.எம் டிரஸ்ட் நிர்வாகிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்


