தேனியில் 8 அம்சா கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக நேதாஜி கட்டுமானம் மற்றும் சாலையோர வணிகர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆனை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மாதம் ஒருமுறை விளக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் ,அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் இல்லாத சாலையோர வியாபாரிகளுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும் ,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு கணக்கெடுப்பு எடுத்து விலையில்லா தள்ளுவண்டி உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும்,
மத்திய மாநில அரசுகளின் நிதி சலுகையில் மானியம் கிடைக்கும் பயனர்களுக்கு உடனடியாக கிடைக்குமாறு உருவாக்கித் தர வேண்டும் என்றும் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில்
நேதாஜி கட்டுமானம் மற்றும் சாலையோர வணிகர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கத்தின் நிறுவனர் நாகராஜ்
மாவட்ட செயலாளர் சிவசங்கர்,தேனி நகர தலைவர் -அம்மவாசி, தேனி நகர செயலாளர் மாரிச்சாமி ,தேனி நகரஇனை செயலாளர் மோகன்பாபு,தேனி நகர பொருளாளர் கார்த்திக்,
தேனி நகர ஆலோசகர் பால்சசாமி நிர்வாக கமிட்டியாளர் கலையரசன், பாண்டி மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
தொடர்ந்து தேனி - அல்லி நகரம் நகராட்சி தலைவர் ரேணு பிரியா பாலமுருகனிடம் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்





