வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பாஜக சார்பில் மனு
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அங்கு உள்ள நிறை குறைகளை ஆய்வு செய்யும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது .இந்த குழு சார்பாக சில தினங்களுக்கு முன்பாக வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் பகுதிகளில் ஆய்வு செய்து அங்கு உள்ள நிலை குறைகளை மாவட்ட பாஜக தலைவர் அனுமதியோடு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினார்கள். அந்த மனுவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு திருவிழா நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் மட்டும் இலவச தரிசனம் மற்றும் ராட்டினங்களில் இலவசமாக பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் ,
பழைய EO அலுவலகத்தை தனியார் நபர்கள் வியாபார நோக்கத்தோடு சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி வருவதை தடை செய்ய வேண்டும் என்றும்,தேனி கம்பம் சாலையில் அமைந்துள்ள மண்டபத்தின் முன் பகுதிகளில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு பலி தானம் செய்ய இலவச அனுமதி வழங்க வேண்டும் என்றும் ,கோவில் திருத்தேர் அமைந்துள்ள பொது கழிப்பறை மிகவும் அசுத்தமாக உள்ளது என்றும் அதனை உடனடியாக சரி செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும்
,சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையும் தடை செய்ய வேண்டும் என்றும், பெண்பக்தர்களுக்கு அதிகப்படியான உடை மாற்றும் அறைகள் பல்வேறு பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கினார்கள் இந்த நிகழ்வின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, முன்னாள் வடக்கு ஒன்றிய தலைவர் அன்னப்பராஜ், தேனி வடக்கு ஒன்றிய தலைவர் அழகர்ராஜா, பொதுச் செயலாளர்கள் அன்னமலைராஜா பிரிதிவிராஜ் ,பொருளாளர் கமலக்கண்ணன், தேனி நகர் தலைவர் ரவிக்குமார் மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்



