தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவம் பஞ்சுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்மகுண்டு ஊராட்சி வாலிப் பாறை மற்றும் சுற்று வட்டார 24 கிராம விவசாய பொதுமக்கள் சார்பாக மருது பாண்டி ,ராஜா ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கடமலை மயிலை ஒன்றியத்தில் 5000 ஹெக்டர் பரப்பளவில் இலவம்பஞ்சு சாகுபடி அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் செய்து வருவதாகவும் ,கடந்த ஆண்டு ஒரு கிலோ பஞ்சு ரூபாய் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது என்றும் தற்பொழுது இந்த வருடம் வெறும் 38 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனால் விவசாயிகளுக்கும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் ,
இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் பெற்று வெளி மார்க்கெட்டில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
,இலவம் பஞ்சு விலையை அரசு நிர்ணயம் செய்யக்கோரி கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களும் விவசாயிகளும் விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் ,
இந்தப் பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இலவம் பஞ்சுக்கு ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாய் என நிரந்தரம் செய்து கதர் வாரியம் மூலம் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது இந்த மனு அளித்த போது 30க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்