Type Here to Get Search Results !

தேனி அருகே பட்டாளம்மன் கருப்புசாமி திருக்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

 தேனி அருகே பட்டாளம்மன் கருப்புசாமி திருக்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது 


தேனி அருகே அம்பாசமுத்திரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பட்டாளம்மன் கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும்  பங்குனி திருவிழா மிக விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம் .


அதேபோல் இந்த வருடம் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் முதல் நாளில் சுவாமி வான வேடிக்கையுடன் அழைத்து வரும் நிகழ்ச்சியும்,,


இரண்டாம் நாளில் தீச்சட்டி எடுத்தால் மாவிளக்கு எடுத்தால் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும்,பக்தர்களின் வீட்டிருந்து பல நாட்கள் விரதம் இருந்து வைக்கப்பட்ட முளைப்பாரி திருக்கோயில் வளாகத்துக்கு ஊர்வலமாக கொண்டுவரும்  நிகழ்ச்சியும் நடைபெற்றது .



கருப்பசாமி பட்டாளம்மன் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் முளைப்பாரியை சுற்றி பக்தி பாடல்களை பாடி பெண்கள் அனைவரும் கும்மி பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்




இந்த நிகழ்வின் போது பட்டாளமனுக்கும் கருப்புசாமிக்கும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன .





மேலும் கருப்பசாமி வேடமணிந்த பக்தர் ஒருவர் அருவா மேல் நின்று வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது .தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் பல நாட்கள் விரதம் இருந்து வைக்கப்பட்ட முளைப்பாரிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் அம்பாசமுத்திரத்தின் முக்கிய தெருக்களின் வழியாக சென்று பூர்விக கிணற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும்







தொடர்ந்து வைகைஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த பங்குனி திருவிழாவில் அம்பாசமுத்திரம் கோபாலபுரம் நாகலாபுரம் கண்டமனூர் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பட்டாளம்மன் கருப்பசாமி அருள் பெற்று சென்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store