போடி பரமசிவன் திருக்கோவிலில் கிரிவல பாதையினை திறக்க கோரிக்கை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் அமைந்து உள்ளது அருகே உள்ள இந்த திருக்கோவில் அருகே அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலும் உள்ள நிலையில் திருக்கோவிலுக்கு செல்ல பாதை இல்லாத நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது
பரமசிவன் கோவிலில் பின்புறம் உள்ள பாலசுப்பிரமணிய கோவிலுக்கு பரமசிவன் கோயிலில் கிரிவலப் பாதையில் நேரடியாக சாமி தரிசனம் செய்து வந்த பக்தர்கள் கடந்த சில மாதங்களாக இப்பதையை மறைத்து பக்தர்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது இதனால் கிரிவலப் பாதை வழியாக முருகனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு சென்று அப்பால் முருகனை தரிசித்து வருகின்றனர். தற்பொழுது அடைக்கப்பட்ட பாதையை திறக்க அறநிலையத்துறை மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகம் முன் வர வேண்டுமென முருக பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


