தேனியில் சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தினர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் கோரிக்கைகளை விளக்கி சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் .சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையிலும்,
மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தொகுப்பை நிகழ்த்தினார் .மாவட்ட தலைவர் பாண்டி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் போராட்டத்தின் வாழ்த்துரை நிகழ்த்திய இந்த போராட்டத்தில் கிராம ஊராட்சிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
அவ்வாறு நிரப்பும் போது தற்காலிகமாக பணி புரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்களை இணைத்து நிரப்ப வேண்டும் என்றும், கிராமம் ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் ,தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி சுகாதார பணியாளர்கள் கணினி இயக்குபவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ,
கொரோனா கால தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் தொழிலாளர்களுக்கும் அரசு உத்தரவாதம் அளித்தபடி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை வழங்க வேண்டும் நியமிக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் அனைவரும் சோத்து சட்டியுடன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்








