10 நாட்களுக்குள் இணைக்காவிட்டால் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் ஓ பன்னீர்செல்வம்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவின் முக்கிய நபராக கருதப்படும் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க விட்டால் நாங்கள் ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபடுவோம் என்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் .மேலும்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன்
இந்த செய்தியாளர் சந்திப்பு தமிழக முழுவதும் உடனடியாக சென்றடைய வேண்டிய தகவல் என்றும் அதிமுகவை 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கி வைத்தார் என்றும்,அன்று எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் கிளை செயலாளர் முதல் பணியாற்றி வந்த நிலையில்1977 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் எனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் என்றும்,எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தும் செயல் மிக்கவராக செயல்பட்டவர் ஜெயலலிதா என்றும்,
அன்றே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில்,எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திறமை மிக்க ஆட்சி நடத்தி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி தமிழகத்தில் சிறந்த ஆட்சியை செயல்படுத்தி வந்தனர் என்றும்,ஜெயலலிதா மறைவுக்குபிறகு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்த போதிலும் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்தோம் என்றும்,அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் கட்சி உடைந்த விடக்கூடாது என்பதற்காக அமைதியை காத்து வந்த நிலையில் அதிமுகவுக்காக பல்வேறு தியாகங்களை செய்து வந்துள்ளேன் என்றும்,எம்ஜிஆர் ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் ,2016 க்கு பிறகு தேர்தல் களம் என்பது அதிமுகவுக்கு எவ்வளது போராட்டக் களமாக உண்டானது என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றும்,கட்சியை விட்டு வெளியே சென்ற அனைவரும் ஒன்று இணைந்தால்தான் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும்,பாஜகவின் மூத்தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டெல்லிக்கு சென்று வந்தேன் என்றும்,ஆறு முன்னாள் அமைச்சருடன் சேர்ந்து கட்சியின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போதும் பொதுச்செயலாளர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும்,,
அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைத்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என்றும்,அதிமுகவில் பிரிந்த அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன்னின்று ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபடுவோம் என்றும் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
இதேபோல் தேனியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ்
எனது மனதின் குரலாக செங்கோட்டையன் பேசியுள்ளார் என்றும் ,
அதிமுக பிரிந்து இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்
மேலும் தற்பொழுது ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் தனித்தனியாக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடப்படதக்கது




