போடியில் வஉசியின் 153வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அகில இந்திய வ உ சிதம்பரனார் பிள்ளை பேரவை சார்பாக வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .மேலும் இந்த பிறந்த நாளை முன்னிட்டு போடியில் உள்ள வ உ சியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
தொடர்ந்து போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .
மேலும் இந்த நிகழ்வில் பேரவையின் தலைவர் ஐயப்பன், செயலாளர் குமரேசன் ,பொருளாளர் வேலுப்பிள்ளை மற்றும் வ உசி சிதம்பரனார் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்




