தேனியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 247 மனுக்கள் பெறப்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 247 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி. தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமாதவன். உதவி ஆணையர் (கலால்) முத்துலெட்சுமி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சம்பூர்ணம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




