தேனி அருகே விஷப் பூச்சிகள் தங்கும் பள்ளியினை அகற்றி கொடுக்கக் கோரி கிராம பொதுமக்கள் சார்பில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கொங்குவார்பட்டி அருகே உள்ள காமக்கப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தலைமையில் கிராம பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது .இந்த மனுவில் காமக்கப்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே இடியும் நிலையில் உள்ள கட்டிடமாகவும் ,பாம்புகள் விஷப்பூச்சிகள் தங்கி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள பாழடைந்த பயன்படாத பழைய அரசு பள்ளி கட்டிடம் உள்ளதை இடித்து அந்தப் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும்
,கொங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தாத நிலையில் இருந்த கழிப்பறைகளை கிராம பொதுமக்கள் சார்பாக செலவு செய்து புதுப்பித்தல் செய்தும்,இந்தப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மேலும் அந்த மனுவில் தேவதானப்பட்டி பேரூராட்சி காமக்கப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் அதிகமாக தங்கி உள்ளது என்றும் ,இதனால் மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடும் என்றும் இதனால் பழைய கட்டிடத்தினை இடித்து தள்ள வேண்டும் என்றும்,இந்த கட்டிடத்துக்கு அருகே குழந்தைகள் அடிக்கடி சென்று வருவதாலும் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் பக்கத்து வீடுகளுக்கும் ஆபத்தை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ,தற்பொழுது இந்த பள்ளியில் வகுப்பறை சிறியதாகவும் குழந்தைகள் விளையாடுவதற்கும் கூட வெளியே வர முடியாமல் உள்ள நிலையில் இந்தப் பள்ளி அருகில் உள்ள பழைய கட்டிடத்தினை இடித்து குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்
,கொங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயன்படுத்த முடியாமல் இருந்த மாணவர்களின் கழிப்பிடம் புதிய தலைமை ஆசிரியர் அவர்கள் முயற்சியாலும் பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைப்புடன் சுத்தம் செய்து உள்ளது என்றும், இந்த பள்ளியில் 320 மாணவ மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் இந்தப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இருந்தும் இந்த விளையாட்டு மைதானம் முட்புதர்கள் அதிகமாக உள்ளதனால் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டு வருகிறது என்றும் ,பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்திட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறி கிராம பொதுமக்கள் சார்பாக ராமசாமி என்பவர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது





