ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பள்ளி வகுப்பறை, ரேசன் கடை ,நூலகம், அங்கன்வாடி கட்டிடங்களை எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடங்கள் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. ராஜதானி ஊராட்சியில் டி.அழகாபுரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு நேற்று எம்எல்ஏ மகாராஜன் வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோல் ஜக்கம்மாள்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான ரேஷன் கடையை எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, சீனி உள்ளிட்டவைகளை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். கொத்தப்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வி பொது நூலகங்கள் சிறப்பு உதவி திட்டத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பொது நூலகம் கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதேபோல் கோத்தலூத்து கிராமத்தில் ரூ.17.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உங்கள் திருக்கோவில் வரலாறு மற்றும் உங்கள் கிராமங்களின் வரலாறு இடம்பெற தொடர்பு கொள்ளவும் - உங்கள் கிராம செய்திகள் அனைத்தும் இலவசமே
இந்த நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மற்றும் ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அய்யப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


