அன்புக் கரங்கள் திட்டத்தில் மாணவர்கள் யார் யார் பயபெறலாம் விரிவான விளக்கம்
அன்புக் கரங்கள் திட்டத்தில் மாணவர்கள் யார் யார் பயபெறலாம் விரிவான விளக்கம்
:
--- PAGE 1 ---
அன்பு கரங்கள் திட்டம் வழிகாட்டு புத்தகம்
மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்) அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 14.03.2025 அன்று 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட உரையின் போது பின்வரும் அறிவிப்பினை (அறிவிப்பு எண்.175/2025) வெளியிட்டுள்ளதை தொடர்ந்து உரிய கருத்துருவை அரசுக்கு அனுப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முதற்கட்டமாக, மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில், குழந்தைகள் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்."
இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ள குடும்பங்களை கண்டறிதல்:-
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளை கண்டறிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (Tamil Nadu E-Governance Agency)-லிருந்து, 282105 வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
2. கைபேசி செயலி (Mobile Application):
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் கைபேசி செயலி (Mobile Application) உருவாக்கப்பட்டு, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோரால் மாவட்ட அளவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
கைபேசி செயலி (Mobile Application) பயிற்சி விவரம்
ஒவ்வொரு வட்டாரத்திலும் 2 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் முதுநிலை பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, 636 முதுநிலை பயிற்சியாளர்களுக்கு கைபேசி செயலி குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
--- PAGE 2 ---
முதுநிலை பயிற்சியாளர்களை கொண்டு (Master Trainers) வட்டார தன்னார்வலர்களுக்கு (Volunteers) கைபேசி செயலி குறித்து பயிற்சி வழங்கப்படும்.
3. குழந்தைகளை கண்டறிதல்:-
(Tamil Nadu E-Governance Agency)-யிடமிருந்து பெறப்பட்ட 282088 குடும்பங்களில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்டறிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் மாவட்ட அளவில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
4. குழந்தைகளை பரிந்துரை செய்தல்:-
தன்னார்வலர்களால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகளின் விண்ணப்பங்களில், 10% குழந்தைகளின் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு (Super Check Officer) மறு சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும்.
(Deputy Tahsildar (KMUT), ADWT, SSS Tahsildar, etc.)
10% குழந்தைகளின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்பிற்கு பின்பு அனைத்து விண்ணப்பங்களும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பப்படும்.
அவ்வாறு அனுப்பப்படும் 10% குழந்தைகளின் விண்ணப்பங்களில் மறு சரிபார்ப்பின் போது பிழை ஏதும் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட தன்னார்வலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் சரிபார்ப்பு அலுவலர் சரிபார்த்து, கைபேசிச் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல்:
அதிகாரிகள் பரிந்துரை செய்த விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்ட குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் வழங்க வேண்டும்.
6. குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குதல்:-
--- PAGE 3 ---
மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் அடிப்படையில் குழந்தைகளுக்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலம் உதவித் தொகை வழங்கப்படும்.
7. குழந்தைகளின் தொடர் கண்காணிப்பு:
கல்வி இடைநிற்றல் இல்லாத குழந்தைகளுக்கு மட்டுமே இவ்வுதவிதொகை தொடர்ந்து வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தால் பள்ளி கல்வி துறையின் மூலம் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலுவது உறுதி செய்தல் வேண்டும்.
தன்னார்வலர்கள் குடும்பங்களில் கள ஆய்வு மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட விவரங்களை சரிப்பார்க்க வேண்டும்.
* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பங்கள்.
* அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்
* Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) உள்ள குடும்பங்கள்.
* ஓட்டு வீடு கூரைவீடு/தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு-ல் வாழும் குடும்பங்கள்
* Priority Household and Antyodaya Anna Yojana (PHH & AAY) உள்ள குடும்பங்கள்.
* ஒரே ஒரு இரு சக்கர வாகனம் மட்டும் வைத்திருக்கும் குடும்பங்கள்
* குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகள்
* மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு தொகை (Sponsorship) பெறும் குழந்தைகள்.
* கோவிட்-19 இன் கீழ் பராமரிப்பு நிதி பெறும் குழந்தைகள்
* PM CARES திட்டத்தின் கீழ் பராமரிப்பு நிதி பெறும் குழந்தைகள்.
மேற்கண்ட விவரங்களை சரிபார்த்த பின்பு, இத்திட்டத்தில் பயன் பெற அக்குழந்தைக்கு தகுதி இருக்கும் பட்சத்தில், பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
மேலும், குழந்தையின் பாதுகாவலர்கள் வேறு திட்டங்களின் கீழ் பயன் அடைந்தாலும், இவ்வுதவித்தொகை குழந்தையின் கல்விக்காக கட்டாயமாக வழங்கப்பட வேண்டுமென தன்னார்வலர்கள் கருதும் பட்சத்தில், அக்குழந்தைக்கு உதவித்தொகை வழங்கிட அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
--- PAGE 4 ---
மேற்கண்ட வ.எண்.7,8,9&10-ன் கீழ், குழந்தைகள் வந்தால் ஏற்கனவே நிதி உதவி திட்டத்தில் பயனடைவதால், இத்திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்படக்கூடாது.
தன்னார்வலரின் பணிபொறுப்புகள்:
கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்/ சுய உதவிக் குழு தன்னார்வலர்கள் ஆகியோரின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* கள ஆய்வுக் செல்லும் தன்னார்வலர்கள் தங்களது அடையாள அட்டையை கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும்.
* தன்னார்வலர்கள் தங்களது திறன் பேசியினை (smart phone) உடன் எடுத்து செல்ல வேண்டும்.
திறன் பேசி செயல்படுவதற்கு போதிய மின்கலச் சேமிப்பு (power charge) மற்றும் இணையதள வசதி (Mobile data) இருக்க வேண்டும்.
* கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய குடும்பங்களின் விவரங்கள், துறையின் மூலம் வழங்கப்படும்.
* சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு சென்று திட்டம் குறித்து விளக்கம் அளித்து, சரிபார்ப்புப் படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளைக் கேட்டு, உரிய ஆவணங்களைச் சரி பார்த்துக் கைபேசிச் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* கள ஆய்வு மேற்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட குடும்பங்கள் முகவரியில் இல்லையென்றால், அதன் விவரத்தை கைபேசி செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
* தகவல் தெரிவிக்க விரும்பாத குடும்பங்களைப் பற்றிய தகவல்களைப் கைப்பேசிச் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
* கைபேசிச் செயலியில் கோரப்படும் கேள்விகளுக்கு எக்காரணத்தைக் கொண்டு தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யக் கூடாது.
* தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்பங்கள் குறித்த கள ஆய்வினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செய்து முடிக்க வேண்டும்.
* கைபேசிச் செயலி குறித்து ஏற்படும் சந்தேகங்களை முதுநிலை பயிற்சியாளரிடம் தெளிவு பெற்ற பின்பு தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* கள ஆய்வு மேற்கொள்ளும் ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கு ரூ.20/- ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு கடிதம் வழங்கப்படும்.
* கள ஆய்வு மேற்கொள்ளும் போது துறையால் வழங்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை தவிர, மேற்கண்ட விவரங்களின் படி குடும்பங்கள் கண்டறியப்பட்டால்,
--- PAGE 5 ---
அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகள் விவரங்களை புதிய விண்ணப்பங்களாக கைபேசிச் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.






