தேனி அருகே வீரபாண்டியில் இமானுவேல் சேகரனாரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது
தேனி அருகே வீரபாண்டியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.முன்னதாக இமானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள் .
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதே போல் வீரபாண்டி கிராம பொதுமக்கள் பெண்கள் உட்பட அனைவரும் இமானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானத்தினை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று தொடங்கி வைத்தார்.வீரபாண்டி பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், புதிய தமிழக கட்சியின் தேனி ஒன்றிய செயலாளர் போது ராஜா மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் சங்கத்தினர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
.இந்த அன்னதான விழாவில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள், தேவேந்திரகுல இளைஞர் சங்கத்தின் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர் .இமானுவேல் சேகரனாரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் சிறப்பு அலங்காரமும் ,அந்த கிராமத்தின் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.













