க.மயிலாடும்பாறை கிராமத்தில் 18 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்.நடைபெற்றது. இதையடுத்து கிராமங்களில் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகாம் குறித்து விளக்கம் அளித்து முகாம்களில் பயன் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகள், அதில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
மயிலாடும்பாறை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மகளிர் உரிமைத் தொகை, மருத்துவத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு ஏராளமானவருக்கு மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல்,ரேஷன் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது
இந்த முகாமில் கடமலை மயிலை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு சிறப்பு திட்டங்கள் பற்றியும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நிதி உதவி சம்பந்தமான அரசு ஆணைகள் வழங்கினார்
இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவிச்சந்திரன் மாணிக்கம், ஊராட்சி செயலர்கள் சோனைமுத்து முருகேசன் சின்னச்சாமி மகாலிங்கம் பாலமுருகன் பாண்டி செயராசு,ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை, ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு மயிலை பிரபு ஒன்றிய சுற்றுச்சூழல் அணி சரவணன், கிளை கழக நிர்வாகிகள் முனியாண்டி, கருணாநிதி , சரவணன் உள்ளிட்ட வருவாய்த்தறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படம் - க மயிலாடும்பாறை கிராமத்தில் 18 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.