மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.
இணையதள வளர்ச்சி அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் whatsapp மூலமாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
பிறப்பு இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள் ,தொழில் வரி ,சொத்து வரி வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பதிவிறக்கம் செய்தல் உட்பட சென்னை மாநகரத்தின் சார்பில் செயல்படுத்த வரும் 32 வகையான சேவைகளை இந்த whatsapp மூலம் டவுன்லோட் செய்து பயன்பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் சென்னையில் வாழும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு 9445061913 என்ற whatsapp எண்ணை பயன்படுத்தி பிறப்பு இறப்பு சான்றிதழ் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு செய்தால் கடை வாடகை செலுத்துதல் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் 32 வகையான சேவைகளை மக்கள் எந்தவித அலைச்சல் இல்லாமல் தங்கள் வீட்டில் இருந்தே இந்த சேவையினை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



