தேனியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டை காலி செய்யக்கோரி நோட்டீஸ் -தடை செய்யக்கோரி கவுன்சிலர் தலைமையில் மனு
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணா பிரபா தலைமையில் மனு அளிக்கப்பட்டது
அதேபோல் அல்லிநகரம் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் இதுவரை வசித்து வரும் மக்கள் அனைவரும் சொத்து வரி, குழாய் வரி ,மின் கட்டணம் மற்றும் அனைத்து அரசு சார்ந்த ஏனைய வரிகளும் நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர் என்றும் ,அதேபோல் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கான பத்திரப்பதிவு பதிந்து வைத்துள்ளனர் என்றும்,
நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் தற்போது நீர் வளர்ச்சி துறை அறிவிப்பு வந்த நிலையில் அங்கு குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதனால் அந்த பகுதிகள் குடியிருக்கும் அனைவருக்கும் அவர்களது வீட்டிலேயே இருக்க வசதி செய்து தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்






