தேனியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது
தேனியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பது பற்றி பதாகைகள் ஏந்தி கோஷம் போட்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலமானது தேனி பங்களா மேட்டில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை வழியாக வருகை புரிந்து மீண்டும் பங்களா மேட்டில் முடிவுற்றது .
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் பார்த்திபன் முன்னிலையில் உதவி செயற்பொறியாளர்கள்செல்வி மற்றும் ராஜேஷ் மற்றும் செயற் பொறியாளர் நடராஜன் ஏ இ.அருண்குமார் நீர்நிலை ஆய்வாளர் மற்றும் உதவி பொறியாளர் யோகேஸ்வரன் ஆகியோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஒவ்வொரு ஆண்டும் 11 ஆம் தேதி மழைநீர் சேகரிப்பு வாரமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கொண்டாடுவது வழக்கம் என செயற்பொறியாளர் பார்த்திபன் தெரிவித்தார்



