தேனி அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா: எம்.பி, எம்.எல்.ஏ புறக்கணிப்பு சர்ச்சை
தேனி அருகே கைலாசபட்டியில் அமைந்துள்ள திரவியம் கல்லூரி வளாகத்தில் தேனி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் பாண்டியராஜன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நினைவு இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது .இந்த திறப்பு விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ,பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம், போடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நேரு பாண்டியன்,தேனி வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்ல பாண்டியன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் L.மூக்கையா ,லட்சுமணன், மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள், விவசாய அணி நிர்வாகிகள்,விளையாட்டு அணி நிர்வாகிகள் ,நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமான திமுக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணகுமார் அப்பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் நிலையில் இந்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை அதேபோல் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் திமுக எம்பி யுமான தங்கத் தமிழ் செல்வன் இதில் பங்கேற்கவில்லை.
புரியாத புதிர்
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற கேள்வி தற்பொழுது அதிகமாக உள்ளது .
ஏனென்றால் இரண்டு முறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வரும் சரவணகுமார் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான இடங்களில் மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறார்.அதை போல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் சிறிய நிகழ்ச்சிகளிலும் நேரடியாக சென்று வாழ்த்தி வரும் நிலையில் இந்த மருத்துவமனை நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட ஆர்வமாக இருந்து வரும் நிலையில் தற்போது தேனி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாக பெரியகுளம் தொகுதியில் சீட்டு கேட்டு நகர்த்தி வருவதாகவும், திமுக நிர்வாகிகளிடையே தற்பொழுது தகவல் கூறப்பட்டு வருகிறது.
இதனால் மருத்துவர் பாண்டியராஜன் பெரியகுளம் தொகுதியில் கடந்த சில வருடங்களாக பல்வேறு நலத்தட்ட உதவிகளையும் இலவசமாக மருத்துவ முகாமையும் செய்து வரும் நிலையில் இவருக்கும் இந்த முறை சீட்டு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
மூன்றாவதாக தற்பொழுது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ சரவணக்குமார் மாவட்ட மருத்துவர் அணி பாண்டியராஜன் ஆகியோர் ரேசில் இருந்து வரும் நிலையில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசியும் இந்த முறை பெரியகுளம் சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு ஆலோசனை செய்து வருவதாகவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் தேர்தலில் நிற்பதற்கு 3 நபர்கள் திமுக சார்பில் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில்
தேனி வடக்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவர் சி. முனியாண்டி என்பவரும் பெரியகுளம் சட்டமன்றத் தேர்தலில் நிற்பதுக்காக காய் நகர்த்தி வரும் நிலையில் தற்பொழுது மருத்துவர் பாண்டியராஜன் திறந்து வைத்த மருத்துவமனை நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது உடன்பிறப்புகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்








0 கருத்துகள்